Latest Oldest

Naaigal

18, Mar 2016

மனிதன் என்ன புண்ணியம் செய்தான் என்று
கடவுள் நாய்களை
செல்ல ப்ராணிகளாய் படைத்தானோ

Kaadhalar dhinam

15, Feb 2016

கண்ணீர் வரும் போது இதயம் வலித்தால்
அது நட்பு..
இதயம் வலித்து கண்ணீர் வந்தால்
அது காதல்..
இல்லை நெஞ்சுவலி

Aatam

21, Jan 2016

தொட்டிலில் பிறந்து
கால் இல்லா கட்டிலில் சென்று
ஆள் இல்லா காட்டில் உறங்கத்தான்
இத்தனை ஆட்டமும்

Amma Vaasam

20, Nov 2015

சொர்க்கம்
அம்மா குளித்து சென்ற
குளியல் அறையில்
ஓடி சென்று முகம்
கழுவும் பொது வரும்
அம்மாவின் வாசம்
சொர்க்கம்

Payanam

07, Oct 2015

நீ எனதில்லை என தெரிந்த பின்னும்
உன் துணை தேடி அலைகின்றேன்
முடிவில்லா இப்பயணம்
என் மூச்சுள்ளவரை தொடரும்
- ஆர்த்தி

Pinoosi

25, Feb 2015

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
அது போல பெண்களுக்கு பின்நூசியும் ஆயுதம்
இன்று என் பின்நூசி
பேருந்தில் தவறாக நடந்து கொண்ட ஒருவன்
தொடையை பதம் பார்த்தது

Privacy Policy T & C Disclaimer Contact